உலக புகைப்படம் தினத்தையொட்டி "பிக்சல் பெர்பெக்ட்" புகைப்படம் போட்டி

உலக புகைப்படம் தினத்தை கொண்டாடும் வகையில் ஆர்ட் ஹூஸ் கேலரி மற்றும் பாலிடால் உடன் இணைந்து "பிக்சல் பெர்பெக்ட்" என்ற தலைப்பில் புகைப்படம் போட்டியை கோயம்புத்தூர் ஜென்னீஸ் ரெசிடென்சியில் நடைபெற்றது.



இப்போட்டியில், "தண்ணீர்" என்ற கருப்பொருள் சம்மந்தமாக புகைப்பட போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான், பீகார், கஜியாபாத், கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.



கோயம்புத்தூரில் முதல் முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் பாலிடால் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் பொன்சானா டேவிட், போட்டியில் வெற்றிபெற்ற முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஐ பிளானட் ஆதரவு அளித்து மற்ற போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளை வழங்கியது.



இதில், 23 பேர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் இறுதியாக மூன்று வெற்றியாளர்களாக சீனிவாசன், கே.ஜெயராம் மற்றும் காயத்ரி தேவி ஆகியோர் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவரும் அவர்களை பாராட்டினர். 



இந்நிகழ்வில், சிஎம்டி ஆர்ட் ஹவுஸ் மற்றும் ஊட்டி தண்டர் வேர்ல்ட் நிறுவனர் வின்சென்ட் அடைகலராஜ், இந்த நிகழ்விற்கு கலந்து கொண்ட புகைப்பட கலைஞர்கள் இந்தியாயில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான வழிகளில் நீர் கருப்பொருளை படமாய்க் கொண்டு காட்சிப்படுத்தினர். இந்த நிகழ்வானது தேசிய புகைப்படத் தரவரிசைகளை உருவாக்குவதன் மூலம் இளம் புகைப்படங்களை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும் என்றார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...